ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42 பாபெர் என ஐந்து பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இதன் வித்தியாசங்கள் மற்றும் முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜாவா 350 42, 42 FJ என மூன்று கிளாசிக் ஸ்டைல் பெற்று டிசைன் மாறுதல்களுடன், மாறுபட்ட எஞ்சின் என வேறுபடுகிறது. பாபர் பைக் ஸ்டைல் பெற்றுள்ள பெராக் மற்றும் 42 பாபர் ஒற்றை இருக்கை அமைப்புடன் கிடைக்கின்றது.
புல்லட் 350 பைக்கினை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற ஜாவா 350 மாடலில் 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் ஸ்டைல் பெற்ற இந்த மாடலில் அலாய் வீல் மற்றும் ஸ்போக் வீல் என இரண்டு விதமான கிடைக்கின்றது.
2024 ஜாவா 350 ஆன்ரோடு விலை ரூ.2.36 லட்சம் முதல் ரூ.2.67 லட்சம் வரை அமைந்துள்ளது.
Jawa 350 Variant & colours | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Spoke – Black, Grey,Deep Forest | Rs. 1,99,950 | Rs. 2,36,432 |
Alloy – Black, Grey,Deep Forest | Rs. 2,11,950 | Rs. 2,50,056 |
Spoke Chrome – Maroon, Black,White, Orange | Rs. 2,17,950 | Rs. 2,57,251 |
Alloy Chrome – Maroon, Black,White, Orange | Rs. 2,26,950 | Rs. 2,66,050 |
நியோ கிளாசிக் ஸ்டைல் கொண்டிருக்கின்ற புதிய 42 எஃப்ஜே மாடலில் புதிய 334cc ஆல்பா 2 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆனது கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
2024 ஜாவா 42FJ ஆன்ரோடு விலை ரூ.2.35 லட்சம் முதல் ரூ.2.60 லட்சம் வரை அமைந்துள்ளது.
Jawa 42FJ Variant & colours | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Spoke–Aurora Green Matte | Rs. 1,99,142 | Rs. 2,35,632 |
Aurora Green Matte | Rs. 2,10,142 | Rs. 2,48,806 |
Mistyque Copper,cosmo Blue Matte | Rs. 2,15,142 | Rs. 2,54,051 |
Deep Black Matte -Red Clad, Black Clad | Rs. 2,20,142 | Rs. 2,59,851 |
கிளாசிக் ஸ்டைல் கொண்ட மற்றொரு மாடலான ஜாவா 42 இந்நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலையில் தொடங்குகின்ற மாடலாகும் இந்த மாடலில் ஜே-பாந்தர் பொருத்தப்பட்டிருக்கின்றது. 294.76சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 27 bhp மற்றும் 26.8 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 14 நிறங்களில் கிடைக்கின்ற இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமான ஆப்ஷனும் கிடைக்கின்றது.
2024 ஜாவா 42 ஆன்ரோடு விலை ரூ.2.05 லட்சம் முதல் ரூ.2.33 லட்சம் வரை அமைந்துள்ளது.
Jawa 42 Variant & colours | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
1ch-ABS Spoke-Vega White | Rs. 1,72,942 | Rs. 2,04,632 |
1ch-ABS Spoke – Red, Grey, Black | Rs. 1,74,942 | Rs. 2,07,016 |
2ch-ABS Spoke – Vega White | Rs. 1,82,942 | Rs. 2,16,451 |
2ch-ABS Spoke – Red, Grey, Black | Rs. 1,84,942 | Rs. 2,19,051 |
2ch-ABS Alloy – White | Rs. 1,89,142 | Rs. 2,24,451 |
2ch-ABS Alloy- Blue,Copper Matte | Rs. 1,95,142 | Rs. 2,29,050 |
2ch-ABS Alloy- Red Matte,DT,Black | Rs. 1,98,142 | Rs. 2,33,259 |
ஒற்றை இருக்கை கொண்ட பாபர் ரக மோட்டார் சைக்கிள் ஜாவா 42 பாபர் மாடலில் 334சிசி எஞ்சின் கொண்டுள்ளது. 334cc என்ஜினுடன் அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
டிஸ்க் பிரேக் செட்டப் உட்பட டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் முன்புறத்தில் 100/90-18, 56H மற்றும் பின்புறத்தில் 140/70-17, 66H டயர் உள்ளது.
2024 ஜாவா 42 பாபர் ஆன்ரோடு விலை ரூ.2.50 லட்சம் முதல் ரூ.2.73 லட்சம் வரை அமைந்துள்ளது.
Jawa 42 Bobber Variant & colours | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Spoke– White | Rs. 2,12,500 | Rs. 2,49,732 |
Spoke– Copper | Rs. 2,15,500 | Rs. 2,53,406 |
Spoke- Red | Rs. 2,18,147 | Rs. 2,57,051 |
Alloy- Copper, RED | Rs. 2,22,950 | Rs. 2,61,856 |
Alloy- Black Mirror Red | Rs. 2,32,500 | Rs. 2,72,151 |
போர்க்களத்தில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக்குகளின் நினைவாக பெராக் பாபர் மாடல் 334சிசி எஞ்சின் கொண்டுள்ளது. டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் முன்புறத்தில் 100/90-18, 56H மற்றும் பின்புறத்தில் 140/70-17, 66H டயர் உள்ளது.
ஜாவா பெராக்கில் மேட் கிரே மற்றும் மேட் பிளாக் என இரு வண்ண கலவையில் வந்துள்ள மாடலின் ஒற்றை இருக்கை இப்பொழுது டேன் மூலம் கொடுக்கப்பட்டு பெராக் பேட்ஜ் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கின் கேப் ஆனது பித்தளையில் வந்துள்ளது. வெயில் நேரங்களில் தெளிவாக கிளஸ்ட்டர் பார்வைக்கு தெரியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஜாவா பெராக் ஆன்ரோடு விலை ரூ.2,54,085 லட்சம் வரை அமைந்துள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆன்-ரோடு விலையில் எவ்விதமான கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.