சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் 250 டீசர் வெளியானது

வரும் 28 அக்டோபர், 2021 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 பைக்கில் பல்வேறு நவீனத்துவமான சிறப்பம்சங்களுடன் 250சிசி என்ஜின் பெற்றிருப்பதுடன், ப்ளூடூத் வாயிலாக இணைக்கப்படும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் செமி ஃபேரிங் ஸ்டைல் மாடல் என்பது உறுதியாகியுள்ளதால் பல்சர் 250F உட்பட கூடுதலாக நேக்டூ ஸ்டைல் 250 NS பைக்கும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது டாமினார் 250 பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 25 ஹெச்பி பவர் மற்றும் 21 என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.

வரவிருக்கும் பல்சர் 250 மாடல் புதிய தலைமுறை பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் என்பதனால் குறைந்த சிசிகளில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ் மற்றும் மற்ற பல்சர் பைக்குகளும் இதன் அடிப்படையில் மேம்படுத்தப்படலாம்.

Share