இந்தியாவில் 125சிசி பைக் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஹீரோவின் புதிய முயற்சியாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற கிளாமர் 125 விற்பனைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது.
ஹோண்டா மற்றும் பஜாஜ் என இரு நிறுவனங்களும் 125சிசி சந்தையில் தற்பொழுது சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ள நிலையில் சிபி 125 ஹார்னெட் என்ற மாடலை பிரீமியம் வசதிகளுடன் ஹோண்டா வெளியிட்டுள்ளது.
2026 Hero Glamour 125 எதிர்பார்ப்புகள்
சில வாரங்களுக்கு முன்பாக க்ரூஸ் கண்ட்ரோலுடன், கலர் டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும், அதே நேரத்தில் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அமைப்பில் தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் இருக்கலாம்.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றதாக அமைந்திருக்கும்.
cruise control என்றால் நெடுஞ்சாலை பயணங்களில் நீண்ட தொலைவு பயணிப்பவர்களுக்கு ஆக்சிலேரேட்டரை தொடர்ந்து இயக்காமல் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க உதவும் அமைப்பாகும். இதன் மூலம் சீரான வேகத்தை பராமரிக்கலாம், பிரேக்கினை இயக்கினால் அல்லது வேகத்தை அதிகரித்தாலே க்ரூஸ் கண்ட்ரோல் இயக்கப்படாமல் வழக்கமான முறைக்கு மாறி விடும்.
குறிப்பாக இதன் முக்கிய நன்மையே ரைடிங்கில் சிறப்பான முறையில் அனுபவத்தை பெறுவதுடன், எரிபொருள் சிக்கனம் அல்லது மைலேஜ் சிறப்பாக வழங்கும், இதில் பின்னடைவு என்றால் நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்குவது கடினம், ரைடர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.
கிளாமரில் தற்பொழுது இரண்டு வேரியண்டுகள் கிடைக்கின்ற நிலையில் புதிய கிளாமர் 125யினை விற்பனைக்கு ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நடப்பு இரண்டாவது காலாண்டில் இரண்டு 125சிசி பைக்குளை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது. அனேகமாக மற்றொரு மாடல் பட்ஜெட் விலையில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,