புதிய ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் படம் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் கரிஸ்மா பைக் மாடலை கரிஸ்மா XMR 210 என்ற பெயரில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளது. டீலர்களுக்கு XMR 210 பைக் காட்சிக்கு வைக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.

கரிஸ்மா பைக்கில் புதிய 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25bhp பவரை வழங்கலாம்.

2023 Hero Karizma XMR 210

210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 Hp பவர் மற்றும் 35 Nm வரையிலான டார்க் வெளிப்படுத்துவதுடன், இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

புதிய கரிஸ்மா 210 பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்களுடன் குறைந்த செட் கிளிப் ஆன் ஹேண்டில்பார் பெற்று டிஜிட்டல் கிஸ்ட்டருடன் முழுமையாக ஃபேரிங் பேனல்களுடன் நவீனத்துவமான பாடி கிராபிக்ஸ் பெற்றிருக்கலாம்.

சமீபத்தில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V டீசர் வெளியாகியுள்ளதால், கரிஸ்மா 210 பைக் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு ரூ.1.65 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

source

Share