ரூ. 99,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஏதெர் 450எக்ஸ் சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 116 கிமீ ரேஞ்சு வழங்குவதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
ஏதெர் 450 எக்ஸ் முந்தைய மாடலான 450 ஸ்கூட்டரை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 116 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டாலும் உண்மையான ரேஞ்சு 85 கிமீ என உறுதிப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏதெர் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 6 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.
450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.
450எக்ஸ் ஸ்கூட்டரில் ஈக்கோ மோட், ரைட் மோட், ரேப் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கிளஸ்ட்டரை ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி தொடர்பினை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜி இ-சிம் கார்டு ஆப்ஷனை பெறகின்றது.
இந்நிறுவனம் வெள்ளை நிறத்தை மட்டும் வெளியிட்டுருந்த நிலையில் தற்போது ஏதெர் 450எக்ஸ் ஆனது வெள்ளை, கிரே மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கின்றது. இந்நிறுவனம், தற்போது பேட்டரிக்கு வாரண்டி வரம்பற்ற ஆண்டுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்கும்.
450எக்ஸ் ஸ்கூட்டரில் பிளஸ் மற்றும் ப்ரோ என இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.
ஏதெர் 450 எக்ஸ் விலை ரூ.99,000 (எக்ஸ்ஷோரூம்) ஆகும். நீங்கள் வாங்கும் முறையில் மாதந்தோறும் சந்தா கட்டணமாக பிளஸ் வேரியண்டிற்கு ரூ.1,699 மற்றும் ப்ரோ வேரியண்டிற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும்.
நுட்பவிபரம் | Plus pack | Pro pack |
விலை | ரூ. 1,699 மாதம் | ரூ. 1,999 மாதம் |
பேட்டரி | 2.4kWh | 2.61kWh |
பவர் | 5.4kW | 6kW |
டார்க் | 22Nm | 26Nm |
அதிகபட்ச வேகம் | 80kmph | 80kmph |
0-40 kmph | 3.9 seconds | 3.4 seconds |
ரேஞ்சு | 65km (Ride), 75km (Eco) | 70km (Ride), 85km (Eco) |
வேகமான சார்ஜ் 0-100 per cent | 1km/min 5hr 45min | 1.45km/min 5hr 45min |
மாற்றாக 450 எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.49 லட்சம் மற்றும் 450 எக்ஸ் ப்ரோவின் விலை ரூ.1.59 லட்சம் ஆகும். (எக்ஸ்ஷோரூம் விலை) இந்த பிளானை பொறுத்த வரை மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது. மூன்று வருடம் மட்டுமே பேட்டரி வாரண்டி வழங்கப்படும். ஆனால் ஏதெர் கனெக்ட் எனப்படுகின்ற OTA மேம்பாடு, இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
வரும் ஜூலை முதல் ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் அடுத்த சில மாதங்களில் ஏத்தர் 450 பைக் நீக்கப்பட உள்ளது. ஆனால் இந்த மாடலுக்கான மேம்பாடுகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…