இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
ஸ்கூட்டர் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதும், அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இறக்குமதி செலவை அதிகரிப்புடன், முக்கிய எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதால் உயர்வை தவிர்க்க இயலவில்லை என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் டிசம்பர் 31, 2025 வரை எதெர் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ரூ. 20,000 வரை சலுகைகளை பெறுவதுடன், ரூ. 10,000 வரை ரொக்க தள்ளுபடி, கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை உடனடித் தள்ளுபடி வழங்கப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

