ஏதெர் எனர்ஜியின் EL பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் அடிப்படையில் EL01 என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
Ather EL Platform
ஏதெரின் EL பிளாட்ஃபார்ம் ஆனது 26 லட்சம் கிமீ டேட்டா கொண்டு உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் ஆக அமைந்திருப்பத்துடன், இதனை பயன்படுத்தி பல்வேறு மாடல்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்கள் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சந்தையின் மாறுபட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கலாம்.
யூனிபாடி ஸ்டீல் சேஸிஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இஎல் பிளாட்ஃபாரம் மிக விரைவான உற்பத்தி அதாவது மற்ற மாடல்களை விட 15 % வேகம், 2 மடங்கு வேகமான சர்வீஸ், சர்வீஸ் இடைவெளி ஒவ்வொரு 10,000 கிமீ வரை நீட்டிக்க முடியும்.
பாதுகாப்பு சார்ந்தவற்றில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் AEBS (Advanced Electronic Braking System) எனப்படுகின்ற பிரேக்கிங் மூலம் குறைந்த தொலைவில் நிறுத்த உதவும், அதே நேரத்தில் பின்புற சக்கரங்கள் பூட்டிக் கொள்வதனை தடுக்கும்.
ஸ்விங்காரம் மவுன்டேட் மோட்டாருடன் பெல்ட் டிரைவ் வழங்கப்பட்டு ஆன்-போர்டு சார்ஜர் + மோட்டார் கண்ட்ரோலர் ஒரே யூனிட்டில் வழங்கப்பட்டு தனியாக போர்டபிள் சார்ஜர் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக்குடன் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
Ather EL01 Concept
இஎல் பிளாட்ஃபாரத்தை கொண்டு பல்வேறு மாறுபட்ட டிசைன் மட்டுமல்லாமல், பல்வேறு மாறுபட்ட திறன் கொண்ட பேட்டரிகளை பயன்படுத்தவும் ஏற்ற வகையில் அமைந்துள்ள நிலையில், முதலில் காட்சிப்படுத்தபட்டுள்ள EL01 கான்செப்ட் மேக்ஸி ஸ்டைலை பெற்று 14 அங்குல வீல் கொண்டுள்ளது.
கான்செப்ட் நிலை உற்பத்திக்கு செல்லுமா அல்லது இதன் அடிப்படையிலான மாடலை உருவாக்குமா என்பது குறித்து எவ்விதமான தகவலும், நுட்பவிபரங்களும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக இந்த பிளாட்ஃபாரம் மேக்ஸி ஸ்டைல் மட்டுமல்ல, ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் மற்றும் ஃபேம்லி சாய்ஸ் என பலவற்றுக்கு ஏற்றதாகும்.
மேம்பட்ட மின்னணு பிரேக்கிங் சிஸ்டம் பெறுகின்ற இந்த ஸ்கூட்டர்கள் இது ஏபிஎஸ் நுட்பத்துக்கு மாற்றல்ல ஆனால் சிறந்த பிரேக்கிங் ஆப்ஷனாகவும், சார்ஜ் டிரைவ் கன்ட்ரோலர், ஆன்-போர்டு சார்ஜரை மோட்டார் கன்ட்ரோலருடன் ஒருங்கிணைப்பதன் மூலம் போர்ட்டபிள் சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை நீக்குவதால் பூட் ஸ்பேஸ் சிறப்பானதாக இருக்கும்.
EL01 முதலாவதாக உற்பத்திக்கு அவுரங்காபாத்தில் துவங்கப்பட உள்ள மூன்றாவது தொழிற்சாலையில் 2026 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக வரக்கூடும், விலை அனேகமாக பட்ஜெட் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக துவங்கலாம்.
EL01 தவிர ஏதெர் மிகவேகமான சார்ஜர், ரெட்க்ஸ் மோட்டோ ஸ்கூட்டர் கான்செப்ட், ஏதெர் ஸ்டேக் 7.0, ஏதெர் 450 ஏபெக்ஸ் மாடலில் க்ரூஸ் கண்ட்ரோல், ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை வசதி, டெர்ராகோட்டா சிவப்பு நிறம் ஆகியவை ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.