Battery-as-a-Service (BaaS) திட்டத்தின் மூலம் ஏதெர் எனர்ஜியின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ,75,999 மற்றும் 450 வரிசையின் ஆரம்ப விலை ரூ.84,341 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு கிமீ பயணத்துக்கு ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு 60% வரை மதிப்பு உத்தரவாதத்துடன் திரும்பப் பெறும் (BuyBack) திட்டத்தையும், பேட்டரி, மோட்டார், மோட்டார் கன்ட்ரோலர், டேஷ்போர்டு,
சார்ஜர் மற்றும் முக்கிய 7 பாகங்களை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிலோமீட்டர் வரை வழங்குகின்றது.
வாடிக்கையாளர்களிடம் கிலோமீட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது, மேலும் பேட்டரியின் விலையை 3 முதல் 4 ஆண்டுகளில் நுகர்வோர் விருப்பப்படி செலுத்தும் திட்டம் அமைந்துள்ளது. BaaS முறையில் பேட்டரி பயன்பாட்டு அடிப்படையிலான கட்டண முறையைக் கொண்டு, குறைந்தபட்சம் மாதாந்திர பயன்பாடு 1000 கிலோமீட்டர் என்ற அடிப்படையிலே அதாவது ரூ.1 ஒரு கிலோமீட்டருக்கு வசூலிக்கப்படும் முறையில் துவங்கி 48 மாதங்களுக்கு செலுத்தினால் பேட்டரி முழுமையாக சொந்தமாகிவிடும்.
BaaS முறையில் Ather Rizta விலை ரூ.75,999 (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, இது வாடிக்கையாளர்கள் வழக்கமாக வாங்கும் தொகையில் 30% குறைவாக செலுத்தி ஸ்கூட்டரை வாங்க முடியும். நாடு முழுவதும் உள்ள ஏதெரின் 3300+ ஃபாஸ்ட் சார்ஜர்களில் வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு இலவச ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பெறுவார்கள்.
விரிவான பிளான்கள் மற்றும் முழுமையான கட்டண அட்டவனை விரைவில் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹீரோ விடா BAAS திட்டத்தை அறிவித்திருந்தது.