Skip to content

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக்

இந்தியாவின் மிக சிறப்பான ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு Community தினத்தின் கருப்பொருள் “மந்திரம் போல செயல்படும் தொழில்நுட்பம்” (Technology that works like magic)  என்பதாகும், மேலும் ஏதெரின் புதிய ஸ்கூட்டர் EL பிளாட்ஃபாரம் உட்பட மற்ற கான்செப்ட் வாகனங்களை சமூக தினம் 2025ல் காட்சிப்படுத்த உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏதெர் முன்பே குறிப்பிட்டபடி “Zenith” என்ற பெயரிலான மோட்டார்சைக்கிள் பிளாட்ஃபாரத்தையும், EL என்ற பெயரில் உருவாக்கப்படுகின்ற புதிய ஸ்கூட்டர் பிளாட்ஃபாரம் மூலம் தயாரிக்கப்பட உள்ள மாடல் மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஸ்கூட்டர் மாடல்களாக இருக்கலாம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சில் அடுத்த தலைமுறை வேகமான சார்ஜர்கள் மற்றும் மென்பொருள் சார்ந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஏதெர் ஸ்டேக் 7.0 ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என இந்நிறுவனம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஏதெர் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற உள்ளது.