பிரபலமான ஏதெர் ரிஸ்டா ஃபேம்லி ஸ்கூட்டரின் Z வேரியண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு OTA மூலம் தொடுதிரை வசதி மற்றும் டெர்ராகோட்டா சிவப்பு என்ற நிறம் ஒற்றை மற்றும் டூயல் டோன் என இரு விதமாக கிடைக்கின்றது.
இன்றைய ஏதெரின் கம்யூனிட்டி தினத்தில் EL platform உட்பட EL01, Redux என்ற இரு கான்செப்ட்களுடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் விரைவு சார்ஜரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரிஸ்டா இசட் வேரியண்டை ஏற்கனவே வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு தொடுதிரை செயல்பாட்டை செயல்படுத்தும் ஒரு OTA புதுப்பிப்பைப் பெறுவார்கள், இது ஸ்கூட்டரில் ஏற்கனவே உள்ளமைக்கப்பட்ட மேம்பட்ட வன்பொருளால் சாத்தியமாகும். தற்போதைய உரிமையாளர்கள் அடுத்த சில வாரங்களில் தொடுதிரை செயல்பாடு மற்றும் ECO ரைடிங் மோடினை செயல்படுத்தும் OTA புதுப்பிப்பைப் பெறுவார்கள். முன்பாக ZIP, Smart ECO என இரு ரைடிங் மோடுகள் உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஈக்கோ மோடில் கூடுதல் ரேஞ்ச் பெறுவதுடன், தொடுதிரை அனுபவத்தை பெறுவது மிக சிறப்பான ஒன்றாக கருதப்படுகின்றது. மற்றபடி ரிஸ்டா Z-ல் டூயல் டோன் மற்றும் சிங்கள் டோன் முறையில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
123 கிமீ ரேஞ்ச் 2.9kwh மற்றும் 159 கிமீ 3.7kwh பேட்டரி ஆப்ஷனை கொண்டு 4.3KW பவர், 22Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ மற்றும் 0-40 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டுகின்றது.