Bike News

மிக வேகமான ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது

ather 450 apex logo

ஏதெர் எனெர்ஜி அறிவித்தப்படி 450 வரிசையில் புதிய 450 அபெக்ஸ் (Ather 450 Apex) என்ற பெயரில் மிக வேகமான ஸ்கூட்டர் வரவுள்ளதை உறுதி செய்யும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு சோதனைக்கு ஈடுபடுத்தி கருத்துகளை பெற்றுள்ளது.

சமீபத்தில் ஏதெர் ஃபேமிலி ஸ்கூட்டர் மற்றும் 450X அடிப்படையில் ஒரு ஸ்கூட்டர் என இரண்டை உறுதி செய்திருந்த மாடலில் ஒன்றை டீசர் மூலம் அபெக்ஸ் என உறுதியாகியுள்ளது.

Ather 450 Apex

ஏதெர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தருன் மெகத்தா வெளியிட்ட டீஸர் மற்றும் ட்வீட்டிலிருந்து, வரவிருக்கும் இந்த புதிய ஏதெர் 450 அபெக்ஸ் மூலம் இ-ஸ்கூட்டர் பிராண்டின் இதுவரை வெளிப்படுத்தாத செயல்திறன் மற்றும் அதிவேகத்தைத் வெளிப்படுத்தும் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.

விற்பனையில் உள்ள 450X பேட்டரி மின்சார ஸ்கூட்டர் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 90 கிமீ ஆகவும்,  0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 வினாடிகள் போதுமானதாகும்.

வரவுள்ள புதிய ஏதெர் 450 அபெக்ஸ் மாடல் மணிக்கு டாப் ஸ்பீடு 110-125 கிமீக்குள் அமைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் 0-40 கிமீ வேகத்தை 3 விணாடிகளுக்குள் எட்டக்கூடும். மேலதிக விபரங்கள் அடுத்த சில ஆரங்களில் வெளியாகலாம்.

புதிய ஏதெர் 450 அபெக்ஸின் மாடலின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது. கூடுதலாக புதிய நிறங்களை பெறக்கூடும் ரேஞ்ச் மற்றும் சில முக்கிய வசதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனவரி மாதம் விலை அறிவிக்கப்படலாம்.

Share
Published by
MR.Durai