Automobile Tamilan

பிஎஸ்-6 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் பவர், விலை விபரம்

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் 125 பைக் பிஎஸ்6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட பவர் 0.2 ஹெச்பி வரை குறைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 மாடலின் விலை தற்போது இரண்டாவது முறையாக ரூ.998 முதல் ரூ.1376 வரை உயர்ந்துள்ளது.

124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பீடுகையில் 0.2 ஹெச்பி வரை பவர் சரிவடைந்துள்ள நிலையில் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லை.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.. பல்ஸர் 150 பைக்கில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது.

f876b bajaj pulsar 125

பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டுள்ள பல்சர் 125 பைக்கின் விலை ரூ.7,300 அதிகபட்சமாக வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 73 939 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய்  78,438 (டிஸ்க் பிரேக்).

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

Exit mobile version