பஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் விற்பனைக்கு வெளியானது

150சிசி சந்தையில் மிகவும் விலை குறைந்த பஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் பைக் ₹ 67,437 விலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. கருப்பு நிறத்தில் கிடைக்க உள்ள பல்ஸர் 150 கிளாசிக் , எவ்விதமான ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகளும் இல்லாமல் வந்துள்ளது.

பஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக்

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பல்ஸர் 150 ட்வீன் டிஸ்க் பிரேக் வேரியன்டை விட ரூ. 10,120 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பிளிட் இருக்கைகள், பெட்ரோல் டேங்கில் உள்ள பேனல்கள், பின்புற சக்கரங்களுக்கான டிஸ்க் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் போன்றவற்றை குறைத்துள்ளது.

மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள பல்சர் 150 கிளாசிக் மாடலில் மிக சிறப்பான வகையில் இரைச்சல், உதறல் மற்றும் கடினத்தன்மை ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ள 14 ஹெச்பி ஆற்றல் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 260 மிமீ டிஸெக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த மாடல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

முதற்கட்டமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள பல்ஸர் 150 கிளாசிக் மற்ற மாநிலங்களில் விரைவில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பல்ஸர் வரிசையில் தற்போது RS200, NS200, NS160, 220F, 180, 150, 150 ட்வீன் டிஸ்க்,150 கிளாசிக் மற்றும்  135LS என மொத்தம் 9 மாடல்கள் விற்பனைக்கு உள்ளது.

பஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் விலை ₹ 67,437 (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

image source – financialexpress

Exit mobile version