Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பல்சர் N பைக்குகளின் வித்தியாசங்கள் மற்றும் ஆன்ரோடு விலை.., எந்த பைக்கை வாங்கலாம்..!

By MR.Durai
Last updated: 16,May 2024
Share
SHARE

Bajaj Pulsar N250 Vs N160 Vs N150

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் என் வரிசை பைக்குகளில் உள்ள N150, N160 மற்றும் N250 ஆகிய மூன்று மாடல்களின் என்ஜின் விபரம், வித்தியாசங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முன்பாக பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளை பற்றி அறிந்து கொண்ட நிலையில் பல்சர் N vs பல்சர் NS என இரண்டுமே ஸ்டீரிட் பைக் என்றாலும் இரு பிரிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் பவர் மற்றும் டிசைனில் அடிப்படையாக மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக N பைக்குகள் NS மாடலை விட குறைந்த பவரை வெளிப்படுத்துவதுடன் சற்று கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது.

குறிப்பாக மூன்று பைக்குகளுமே ஒரே மாதிரியான டிசைனை பெற்று மிக ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இருவிதமான பயன்பாடுகளை கொண்ட எல்இடி புராஜெக்டர் விளக்கு வழங்கப்பட்டுள்ளது.  முதலில் மூன்று பைக்குகளுக்கு இடையிலான என்ஜின் ஒப்பீட்டை அறியலாம்.

Pulsar N250 Pulsar N160 Pulsar N150
என்ஜின் 249.07cc single cyl oil cooled 164.82cc single cyl, Oil cooled 149.68cc single cyl, air oil cooled
பவர் 24.5 PS 16 PS 14.5 PS
டார்க் 21.5Nm 14.65Nm 13.5 Nm
கியர்பாக்ஸ் 5 speed 5 speed 5 Speed
மைலேஜ் 40 kmpl 44 kmpl 47 kmpl

மூன்று பைக்குகளுமே சமீபத்தில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்து நாம் மெக்கானிக்கல் சார்ந்த சஸ்பென்ஷன், பிரேக்கிங் ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம்.

new 2024 bajaj pulsar n150 and pulsar n160

Pulsar N250 Pulsar N160 dual channel ABS Pulsar N160 single ABS Pulsar N150
முன்பக்க சஸ்பென்ஷன் 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் 37 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் 31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் 31 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன் மோனோஷாக் மோனோஷாக் மோனோஷாக் மோனோஷாக்
டயர் முன்புறம் 100/80-17 100/80-17 100/80-17 90/90-17
டயர் பின்புறம் 130/70-17 130/70-17 130/70-17 120/80-17
பிரேக் முன்புறம் 300mm டிஸ்க் 300mm டிஸ்க் 280mm டிஸ்க் 260mm டிஸ்க்
பிரேக் பின்புறம் 230mm டிஸ்க் 230mm டிஸ்க் 230mm டிஸ்க் 130mm டிரம்
வீல்பேஸ் 1352mm 1358mm 1358mm 1352mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165mm 165mm 165mm 165mm
எடை 164 KG 154 KG 152kg 145kg
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர் 14 லிட்டர் 14லிட்டர் 14லிட்டர்
இருக்கை உயரம் 800mm 795mm 795mm 790mm

 

பல்சர் என்160 மாடல் இரு விதமான மெக்கானிக்கல் அம்சங்களை பெற்று சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது. பல்சர் என்150 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் பின்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் என இரு வித ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மற்ற இரண்டு மாடல்களை பல்சர் N250 பைக்கில் கூடுதல் வசதிகளாக டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் ரைடிங் மோடுகள் (Road, Rain and Offroad ) இடம்பெற்றுள்ளன.

Bajaj Pulsar N250 Vs N160 Vs N150 ஆன்ரோடு விலை ஒப்பீடு

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Pulsar N250 ₹ 1.50 லட்சம் ₹ 1.82 லட்சம்
Pulsar N160 ₹ 1.34 லட்சம் ₹ 1.60 லட்சம்
Pulsar N160 SABS ₹ 1.23 லட்சம் ₹ 1.48 லட்சம்
Pulsar N150 ₹ 1.18 – 1.24 லட்சம் ₹ 1.42-1.49 லட்சம்

மிக இலகுவாக மூன்று பல்சர் N பைக்குகளை ஒப்பீடு செய்து விலை உட்பட அனைத்து விதமான விபரங்களையும் சில வசதிகளில் மாறுபட்ட மைலேஜ் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பல்சர் என்150 மாடலை தேர்வு செய்யலாம்.

2024 பஜாஜ் பல்சர் N250

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:bajaj autoBajaj Pulsar N150Bajaj Pulsar N160பஜாஜ் பல்சர் N250
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved