Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
பிஎஸ்-6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியானது

பிஎஸ்-6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனைக்கு வெளியானது

8fbe8 bs6 hero xpulse 200 price

குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடலான ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டு ரூ.1,11,790 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட  பிஎஸ்-4 மாடலை விட 0.6 ஹெச்பி வரை பவரும், 0.7 என்எம் டார்க்கும் சரிவடைந்துள்ளது. எனவே பிஎஸ் 6 என்ஜின் இப்போது ஆயில் கூல்டு எக்ஸ்பல்ஸ் 200 இப்போது அதிகபட்சமாக  8,500rpm-ல் 17.8 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 16.45 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பு வசதிகளில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. விற்பனையில் உள்ள மாடலின் அதே தோற்ற அமைப்பினை கொண்டிருக்கின்றது. மற்றபடி பைக்கின் எடை 3 கிலோ வரை அதிகரித்துள்ளதால் இப்போது 157 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.

190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டதாகவும், நேவிகேஷன் ஆதரவுடன் வந்துள்ளது.

பிஎஸ்-6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1,11,790 (எக்ஸ்ஷோரூம் சென்னை)

Exit mobile version