Categories: Bike News

கனிசமாக விலை உயரும் பிஎஸ்-6 இரு சக்கர வாகனங்கள்

hero passion pro bs6

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அமலுக்கு வந்துள்ளதால் முன்பே விற்பனைக்கு வெளியிடப்பட இரு சக்கர வாகனங்களின் விலையை கனிசமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உயர்த்த துவங்கியுள்ளது.

முன்பாக ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட், ஹோண்டா எஸ்பி 125, யமஹா ஃபேசினோ 125 உள்ளிட்ட மேலும் சில மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஹோண்டா டியோ, ஹீரோ பேஷன் புரோ, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஸ்ப்ளெண்டர் பிளஸ் போன்றவை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டியோ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 552 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Variant Old BS6 Price New BS6 Price Price Hike
Standard ரூ. 59,990 ரூ. 60,542 ரூ. 552
Deluxe ரூ. 63,340 ரூ. 63,892 ரூ. 552

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் பேஸன் புரோ 750 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பேஸன் புரோ விலை பட்டியல்

Variant Old BS6 Price New BS6 Price Price Hike
Drum Brake ரூ. 64,990 ரூ. 65,740 ரூ. 750
Disc Brake ரூ. 67,190 ரூ. 67,940 ரூ. 750
ஸ்ப்ளெண்டர் பிளஸ் விலை பட்டியல்
Variant Old BS6 Price New BS6 Price Price Hike
Kick Start ரூ. 59,600 ரூ. 60,350 ரூ. 750
Self Start ரூ. 61,900 ரூ. 62,650 ரூ. 750
Self Start with i3s ரூ. 63,110 ரூ. 63,860 ரூ. 750

 

மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் விலை அதிகபட்சமாக ரூ.1300 வரை விலை உயர்ந்துள்ளது.

Variant Old BS6 Price New BS6 Price Price Hike
Drum Brake ரூ. 67,950 ரூ. 69,250 ரூ. 1,300
Disc Brake ரூ. 70,150 ரூ. 71,450 ரூ. 1,300

 

(விலை பட்டியல் எக்ஸ்ஷோரூம் டெல்லி)