பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது

royal enfield Himalayan

ரூ.1.86 லட்சம் ஆரம்ப விலையில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மூன்று புதிய நிறங்களையும் சில மேம்பட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.

பிஎஸ்4 மாடலை விட பவர் 1.2 ஹெச்பி வரை குறைக்கப்பட்டு தற்போது 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்கும் நோக்கில் பிரேக்கிங் அமைப்பின் பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டு, ஆஃப் ரோடு டிரைவிங்கிற்கு ஏற்ற சுவிட்சபிள் ஏபிஎஸ், ஆரம்ப அறிமுகத்தின் போது இடம்பெற்றிருந்த ஹசார்ட் விளக்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் வெள்ளை நிற பேக்லைட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கின் சைட் ஸ்டேண்டு அமைப்பில் வாடிக்கையாளர்ளின் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாற்றியமைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை பட்டியல்

Himalayan BS-VI – Snow White ரூ.1,86,811

Himalayan BS-VI – Granite Black ரூ.1,86,811

Himalayan BS-VI – Sleet Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Gravel Grey ரூ.1,89,565

Himalayan BS-VI – Lake Blue ரூ.1,91,401

Himalayan BS-VI – Rock Red ரூ.1,91,401

Exit mobile version