பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, அப்பாச்சி 160 என இரு மாடல்களின் விலையும் ரூ.1,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக ரூ.10,000 வரை விலை உயர்ந்துள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி பைக்கில் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜினுடன் வருகிறது. இது 8250 ஆர்.பி.எம்-ல் 16.02 பிஎஸ் பவர் மற்றும் 7250 ஆர்.பி.எம்-ல் 14.12 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4 வி மாடலில் 197.75 சிசி ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 ஆர்.பி.எம்மில் 20.5 பிஎஸ் சக்தியையும் 7500 ஆர்.பி.எம்மில் 16.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
TVS Apache RTR 160 Price
Apache RTR 160 4V (Drum) – ரூ. 1,00,950/-
Apache RTR 160 4V (Disc) – ரூ. 1,04,000/-
TVS Apache RTR 200 Price
Apache RTR 200 4V – ரூ. 1,25,000/-
* all prices, ex-showroom Delhi
சமீபத்தில் சுசுகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.2,300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யமஹா நிறுவனமும் பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.