இந்தியாவில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிளை ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.35 லட்சம் வரை விலையில் விற்பனைக்கு மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் ஜாவா, யெஸ்டி பெயரில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் பிஎஸ்ஏ பைக்கும் வந்துள்ளது.
கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500RPM-ல் 45 Hp , 4000RPM-ல் 55 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 255mm டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
12 லிட்டர் பெட்ரோல் டேங்கினை கொண்டு 780 மிமீ இருக்கை உயரத்துடன் முன்பக்கத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீலுடன் பைரேலி பான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயரை பெற்று முன்புறத்தில் 100/90 மற்றும் 150/70 பின்புற டயரை கொண்டுள்ளது.
BSA கோல்டு ஸ்டார் 650 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலும் மற்ற 650சிசி என்ஃபீல்டு பைக்குகளும் உள்ளன.
BSA GoldStar price list
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…