மஹிந்திரா கீழ் செயல்படுகின்ற கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்ஏ பிராண்டின் கோல்ட் ஸ்டார் 650 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. 650 சிசி சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக என்ற இண்டர்செப்டார் 650 மாடல் எதிர் கொள்ளும் வகையில் இந்த மாடல் ஆனது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 650cc பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் இரட்டை சிலிண்டர் என்ஜினை கொடுத்திருக்கின்றது ஆனால் பிஎஸ்ஏ ஒற்றை சிலிண்டர் என்ஜினை தான் 652 சிசி என்ஜினாக வழங்கி உள்ளது.
652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500ஆர்பிஎம்மில் 45எச்பி , 4000ஆர்பிஎம்மில் 55என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்போக்டூ வீல் பெற்றுள்ள பிஎஸ்ஏ கோல்டு ஸ்டாரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
முன்பக்கத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீலுடன் பைரேலி பான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் (Pirelli Phantom Sportscomp) டயரை பெற்று முன்புறத்தில் 100/90 மற்றும் 150/70 பின்புற டயரை கொண்டுள்ளது.
ஏற்கனவே பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் மாடலானது இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது இந்திய சந்தைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது . இங்கிலாந்து சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் விலை £6500 – £7000 ஆக உள்ளது.
இந்திய சந்தைக்கு பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் விற்பனைக்கு வரும் பொழுது விலை ரூ.3.20 லட்சத்துக்குள் துவங்கலாம்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…