Categories: Bike News

ரூ.4.99 லட்சத்தில் சிஎஃப் மோட்டோ 650MT இந்தியாவில் அறிமுகமானது

cfmoto 650mt

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்கு சிஎஃப் மோட்டோ பைக்குகளில், 650MT டூரிங் ரக மாடல் அறிமுக விலை ரூ.4.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நீண்ட தொலைவு மற்றும் அட்வென்ச்சர் சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும்.

1989 ஆம் ஆண்டு சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட சிஎஃப்மோட்டோ நிறுவனம், இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் 300NK மாடல் உட்பட 650சிசி என்ஜின் கொண்ட 3 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் பிரபலமான 2017, ஸ்போர்டிவ் பைக் உற்பத்தியாளர் கேடிஎம் தனது மோட்டார் சைக்கிள்களை சீனாவிலும் பிற பகுதிகளிலும் விற்க சி.எஃப் மோட்டோவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் டிசைன் ஹவுஸ் கிஸ்கா நுட்பங்களை அனுகும் திறனை பெற்றே இந்நிறுவன மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

650சிசி என்ஜின் கொண்ட மாடல்களில், பொதுவாக  649.3cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 60.3 பிஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 56 என்எம் முறுக்குவிசையை  வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான அட்வென்ச்சர் டூரிங் ரக 650MT மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட் , டெயில் லைட், டிஜிட்டல் அம்சத்தை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை கொண்டதாக அமைந்துள்ளது.

முன்புறத்தில் ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் டிஸ்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 170 கிமீ வேகத்தில் பயணிக்குதிறன் பெற்ற இந்த மாடலில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டுள்ளது. 650எம்டி மாடலில் ஆகியவற்றுடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 10,000 இரு சக்கர வாகனங்களை ஒருங்கிணைக்க ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிஎஃப் மோட்டோ தனது 650MT பைக் அறிமுக விலையை ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளது. ஹைத்திராபாத், பெங்களூர், மும்பை, புனே,டெல்லி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் AMW டீலர்ஷிப்கள் தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

சிஎஃப் மோட்டோ 300NK ரூ. 2.29 லட்சம்

சிஎஃப் மோட்டோ  650NK ரூ. 3.99 லட்சம்

சிஎஃப் மோட்டோ 650GT ரூ. 5.49 லட்சம்

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

1 day ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

1 day ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

2 days ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

2 days ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

2 days ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

2 days ago