Automobile Tamilan

இந்தியாவில் ரூ.16.50 லட்சத்தில் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 வெளியானது

டுகாட்டி சூப்பர் பைக் தயாரிப்பாளரின் ஒற்றை சிலிண்டர் கொண்ட ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ பைக் இந்திய சந்தையில் முழுதும் வடிவமைக்கப்பட்டதாக இறக்குமதி செய்யப்படுவதனால் ரூபாய் 16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர்மோட்டோ வடிவமைப்பினை சார்ந்த ஹைப்பர்மோட்டார்டு பைக்கிற்கு உரித்தான டிசைன் அம்சங்களை பெற்றுள்ள இந்த மாடல் ஆனது முழுமையான எல்இடி விலங்குகளை கொண்டிருக்கின்றது. நேர்த்தியான டைல்ஸ் செக்ஷன் மற்றும் ஸ்போடிவ் ஸ்டைல் லுக் என கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது.

Ducati Hypermotard 698 Mono Unveiled

Ducati Hypermotard 698 Mono

சூப்பர் குவாட்ரோ மோனோ 659cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 77.5hp பவர் மற்றும் 63Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கூடுதல் பவரை  வேன்டுமென்றால் டெர்மிக்னோனி ரேசிங் எக்ஸாஸ்டுடன் இணைக்கப்படும் பொழுது அதிகபட்சமாக 84.5hp பவர் மற்றும் 67Nm டார்க் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் ஆனது RVE வேரியண்ட் பெற்றுள்ளது.

Marzocchi 45mm முழுமையான அட்ஜெஸ்ட்பிளிட்டி வகையை  சேர்ந்த அப்சைடு டவுன் ஃபோர்க் ஃபோர்க்கு 215 மிமீ பயணத்துடன் மற்றும் 240 மிமீ பயணிக்கின்ற சாக்ஸ் பின்புற மோனோ ஷாக் அப்சார்பருடன் கிடைக்கின்றது.

17-இன்ச் வீல் பெற்றுள்ள ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோவில்  120/70 முன்புற டயர் மற்றும் 160/60 பின்புற டயர் என இரண்டிலும் டயாப்லோ ரோஸ்ஸோ 4 டயர்கள் உள்ளது. இதன் பிரேக்கிங் அமைப்பில் 330 மிமீ டிஸ்க் மற்றும் 245 மிமீ பின்புற டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவில் ஹைப்பர் மோட்டார்டு 698 மோனோ வேரியண்டு மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், RVE வேரியண்ட் தாமதமாக வெளியிடப்படலாம்.

Exit mobile version