Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் படம் கசிந்தது

by MR.Durai
20 January 2024, 8:06 am
in Bike News
0
ShareTweetSend

Hero World 2024

ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ வோல்ர்டு 2024 (Hero World 2024) அரங்கில் மேவ்ரிக் 440, ஜூம் 125, எக்ஸ்ட்ரீம் 125R உட்பட பல்வேறு புதிய மாடல்கள் மற்றும் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது.

குறிப்பாக ஹீரோ தனது முதல் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் மேவ்ரிக் பிரீமியம் மாடரன் ரோட்ஸ்டெரை அறிமுகம் செய்ய உள்ளது.

Hero Xoom 125

EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வெளியிடப்பட்ட Xoom 125R ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் விற்பனைக்கு ஹீரோ ஜூம் 125 பெயரில்  124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டு, இருபக்க டயர்களிலும் 14 அங்குல வீல் பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற உள்ளது. ஜூம் 125 ஸ்கூட்டரின் விலை ரூ. 87,000 முதல் துவங்கலாம்.

Hero Xoom 125R Side view

Hero Mavrick

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மேவரிக் 440 பைக்கில் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க – மேவ்ரிக் பற்றி பல்வேறு விபரங்கள்

hero mavrick teased

Hero Xtreme 125R

பிரத்தியேகமாக நமக்கு கிடைத்துள்ள படத்தின் மூலம் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் தோற்ற அமைப்பு வெளியாகியுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டு இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையில் மிக கூர்மையான எல்இடி ஹெட்லைட், மேற்பகுதியில் எல்இடி ரன்னிங் விளக்குகள் பெற்று மிகவும் அகலமான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் எக்ஸ்டென்ஷனுடன் இணைக்கப்பட்ட 11 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் சீட், டயர் ஹக்கர் மற்றும் 17 அங்குல வீல் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் என இரு விதமான வேரியண்டில் வரவுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் புதிய 124.7 cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 11.50 hp மற்றும் டார்க் 10.5 Nm வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் விலை ரூ.95,000 முதல் துவங்கலாம்.

Xtreme 125R Specs

Engine 124.7cc, air cooled
Power 11.5 hp at 8,250 rpm
Torque 10.5 at 6,250 rpm
Gearbox 5 Speed
Brake FR – Disc (CBS) 240mm, Disc (ABS) 276mm

RR – drum 130mm

Suspension Telescopic and Mono shock
Tyre FR – 90/90 – 17

RR – 120/80 – 17

Kerb Weight 138 kg
Frame: Tubular

hero xtreme 125r bike

xtreme 125r new 1

Hero new 250cc-300cc engine

EICMA 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய 2.5R xtunt கான்செப்ட்டின் அடிப்படையில் வரவிருக்கும் புதிய பைக்கிற்கு 250சிசி முதல் 300சிசி க்கு இடைப்பட்ட நிலையில் லிக்யூடு கூல்டு என்ஜின் தயாரிக்கப்பட்டு வருவதாக சில உறுதியான தகவல்கள் கூறப்படுவதனால் இது தொடர்பான அறிவிப்பு ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

hero 2.5r xtunt

Zero Electric Motorcycles

ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அமெரிக்காவின் ஜீரோ எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரிடம் முதலீடு செய்துள்ளதால் புதிய பிரீமியம் எலக்ட்ரிக் பைக் சந்தையில் கால் பதிக்க ஜீரோ பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதால் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகலாம்.

அனைத்து முக்கிய அறிவிப்புகளும் ஜனவரி 23, 2023 அன்றைக்கு அறிவிக்கப்பட உள்ளது.

zero sr sport electric bike

Related Motor News

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆரில் OBD-2B மேம்பாடு வெளியானது

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஒற்றை இருக்கை வேரியண்ட் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

 

Tags: Hero Mavrick 440Hero Xoom 125Hero Xtreme 125R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero passion 125 million edition sideview

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

new tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.!

விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

ரூ.2.74 லட்சத்தில் அல்ட்ராவைலட் X47 கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகமானது

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan