Categories: Bike News

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

harley-davidson x440 s variant

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக துவங்கப்பட்டுள்ளது.ஹார்லி டீலர்கள் மற்றும் ஹீரோவின் முன்னணி நகரங்களில் உள்ள டீலர்கள் மூலமாகவும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, சூப்பர் மீட்டியோர் 350, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440சிசி ஒற்றை  லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்த மாடலில், எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் ஒளிரும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

Harley-Davidson X440 Prices (ex-showroom)

  • X440 Denim ₹. 2.29 லட்சம்
  • X440 Vivid ₹. 2.49 லட்சம்
  • X440 S ₹. 2.69 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது. அக்டோபர் 2023 முதல் விநியோகம் தொடங்குகிறது

தமிழ்நாட்டில் எக்ஸ் 440 பைக் மாடல் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெய்வேலி, கடலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, ஓசூர், ஈரோடு, செங்கல்பட்டு, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் காஞ்சிபுரம், காரைக்காலில் கிடைக்கும்.

harley x 440 tank
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் பின்புறம்
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் எல்இடி ஹெட்லைட்
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் என்ஜின்

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

4 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

7 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago