முதல் முறையாக 125cc சந்தையில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் கிளாமர் X 125 பைக்கினை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 மிக முக்கியமான அம்சங்களில் மைலேஜ், எஞ்சின், விலை உட்பட முக்கிய மாற்றங்களை அறியலாம்.
Cruise Control எப்பொழுது இயங்கும், எப்படி இயக்க வேண்டும்?
மணிக்கு 30 கிமீ வேகத்தை கடந்தால் க்ரூஸ் கண்ட்ரோல் இயங்க துவங்கும், இயக்க வலதுபுறத்தில் உள்ள க்ரூஸ் பொத்தானை அழுத்தினால் Set Speed என டிஸ்பிளேவில் வந்து பச்சை நிற லைட் எரியும் வேகத்தை க்ரூஸ் பொத்தானில் மேல் நோக்கி அழுத்தினால் வேகம் அதிகரிக்கும், கீழ் அழுத்தினால் வேகம் குறையும், அதிகபட்ச வேகத்தை நீங்களே முடிவு செய்யலாம், உங்களால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் கூட ஹீரோ கிளாமர் X க்ரூஸ் கன்ட்ரோலை இயக்க முடியும்.
க்ரூஸ் கட்டுப்பாட்டை செயல்படுத்தி விட்டால் த்ராட்டில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதனை செயலிழக்க செய்ய பிரேக் அழுத்தினாலும், கிளட்ச் லிவரை அழுத்தினாலும், அல்லது த்ராட்டில் இயக்க துவங்கினால் தானாக ஆஃப் ஆகி விடும்.
மைலேஜ் கிளாமர் எக்ஸ் 65 கிமீ தருமா ?
SPRINT EBT 124.7cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.4 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.4 Nm டார்க் பெற்ற பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65 கிமீ என இந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், நிச்சியமாக க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுத்தி சீரான வேகத்தில் இயக்கினால் தாராளமாக உண்மையான கிளாமர் எக்ஸ் 125 மைலேஜ் லிட்டருக்கு 55 முதல் 60 கிமீ வரை கிடைக்கும்.
60க்கு மேற்பட்ட வசதிகளுடன் கூடிய கலர் கிளஸ்ட்டர்
அடாப்ட்டிவ் 4.2 அங்குல கலர் டிஸ்பிளே பெற்றுள்ள கிளாமர் எக்ஸில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் பல்வேறு வசதிகளை பெறுவதுடன் இயல்பாகவே மைலேஜ் விபரம், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எஞ்சின் தொடர்பான அறிவிப்புகள் என சுமார் 60 விதமான பயட்பாடுகளை வழங்குகின்றது.
பல்வேறு சிறப்புகள்
AERA Tech என்ற நுட்பத்தின் மூலம் ரைட் பை வயர் நுட்பத்தை பெற்று ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
Eco மோடில் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரோடு மோடு சிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதுடன், பவர் மோடு மூலம் சிறப்பான பிக்கப் அதிகப்படியான வேகத்தை எட்டுவதற்கு உதவுகின்றது.
ஹசார்டு லைட், ஹேண்டில் பார் 30mm கூடுதல் அகலத்துடன் 18 அங்குல அலாய் வீல், டைப்-C சார்ஜிங் போர்ட், விண்ட்ஸ்கிரீன் மற்றும் H-வடிவ DRL உடன் LED ஹெட்லைட், பானிக் பிரேக் அசிஸ்ட் என பலவற்றை பெற்றுள்ளது. குறிப்பாக டாப் டிஸ்க் பிரேக் வேரியண்டில் அதிகப்படியான வசதிகள் உள்ளது. வின்ட்ஸ்கிரீன் கூடுதல் உயரத்தை விரும்பாதவர்கள் குறைந்த உயர ஆப்ஷனை தேர்வு செய்யலாம், கூடுதலாக பல்வேறு ஆக்செரீஸ் உள்ளது.
போட்டியாளர்கள் மற்றும் விலைப் பட்டியல்
ஹோண்டா எஸ்பி 125, சிபி 125 ஹார்னெட், பல்சர் 125, பல்சர் என்125, பல்சர் என்எஸ் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய போட்டியாளர்களுடன் மற்ற கிளாமர் வேரியண்டுகள், எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஷைன் 125 போன்றவை கிடைக்கின்றது.
தமிழ்நாட்டில் ஹீரோ கிளாமர் எக்ஸ் விலை ரூ.91,999 முதல் ரூ.99,999 வரை அமைந்துள்ளது.