Automobile Tamilan

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

hero hunk 440sx scrambler

இந்தியாவில் மேவ்ரிக் 440 என்ற பெயரிலும் சர்வதேச அளவில் ஹங்க் 440 என விற்பனை செய்யப்படுகின்ற பைக்கின் அடிப்படையில் ஸ்கிராம்பளர் வடிவமைப்பினை தழுவிய முரட்டுத்தனமான ஹங்க் 440 SX மாடலை EICMA 2025 அரங்கில் ஹீரோ காட்சிப்படுத்தியுள்ளது.

ஸ்கிராம்பளர் வகையில் மாறுபட்ட வடிவமைப்பினை மட்டுமல்ல பல்வேறு நவீன நுட்பங்களையும் கொண்டதாக அமைந்துள்ள ஹங்க் SXயில் ரைட் பை வயர் நுட்பத்துடன் சுவிட்சபிள் ஏபிஎஸ், ரைடிங் மோடுகள், மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

தோற்ற அமைப்பில் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்த இரட்டை புகைப்போக்கி முறையில் வழங்கப்பட்டு மேல் நோக்கி இருப்பதுடன் Knobby டயர்களுடன் முன்பக்கத்தில் 18 அங்குலமும் பின்புறம் 17 அங்குலமும் உள்ளன. இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்ட டிஜிட்டல் TFT டிஸ்ப்ளேவும் உள்ளது.

உயரந்த விண்ட்ஷீல்டு, இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்கில் கவர், பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் பல நவீன அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் தொடர்ந்து 440cc ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 27bhp மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version