Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹீரோ மேவ்ரிக் 440 பைக் அறிமுகமானது

by MR.Durai
23 January 2024, 12:52 pm
in Bike News
0
ShareTweetSend

hero mavrick 440 spoke wheel

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மேவ்ரிக் 440 (Hero Mavrick) பைக்கின் அறிமுகம் ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு பிப்ரவரி மாதம் மத்தியில் துவங்க உள்ளது.

முந்தைய ஹார்லி-டேவிட்சன் X440 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலிங் அம்சங்களை மேவ்ரிக் 440 கொண்டுள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hero Mavrick

ரெட்ரோ ஸ்டைல்  மற்றும் நவீனத்துவமான அடிப்படைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஹீரோ மேவ்ரிக் 440 ரோட்ஸ்டெர் பைக்கில் வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் H-வடிவில் அமைந்துள்ளது. ஹெட்லைட்டின் மேற்பகுதியில் நம்பர் பிளேட கொடுக்கப்பட்டு , பெட்ரோல் டேங்க் அமைப்பில் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று மேவ்ரிக் 440 பேட்ஜ் ஆனது இணைக்கப்பட்டு, டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஹீரோ லோகோ உள்ளது. பக்கவாட்டில் Torq-x பேட்ஜ் மற்றும் நேர்த்தியான 17 அங்குல அலாய் மற்றும் ஸ்போக்டூ வீல் ஆப்ஷன் உள்ளது.

மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் ஏவியேட்டர் வெள்ளை நிறத்தில் ஸ்போக்டூ வீல் கொண்டும், அலாய் வீல் பெற்றுள்ள அடுத்த வேரியண்ட் மாடல் சிவப்பு, நீலம் மற்றும் டாப் வேரியண்டில் கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டு , டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று கருப்பு மற்றும் என்கிமா கருப்பு என மொத்தமாக 5 விதமான நிறங்களை பெற்றுள்ளது.

hero mavrick colours

மேவ்ரிக் பைக்கில் உள்ள ஹீரோ Torq-X 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

நெகட்டிவ் டிஸ்ப்ளே பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரில்  ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைப்பு மூலம் மிக துல்லியமான டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்,  கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கனெக்ட் அம்சங்கள் குறிப்பிட்ட எல்லையில் பயணிக்கும் ஜியோஃபென்ஸ், வாகன இருப்பிடம் கண்டறிதல், இருப்பிட பகிர்வு, வாகனத்தைக் கண்காணிக்கவும், சாலையோர உதவி இதுபோன்ற பல அம்சங்களை ஹீரோ கனெக்ட் மூலம் மேவ்ரிக் பைக் கொண்டுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் டெர்லிஸ் ஸ்டீல் சேஸ் மூலம் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்று 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் 320 மிமீ மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் பைக்கின் முன்பதிவு விலை பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் முதல் டெலிவரி துவங்க உள்ளது.

 

hero mavrick 440 bike first look
hero mavrick 440 spoke wheel
hero mavrick 440
hero mavrick 440 tank logo
ஹீரோ மேவ்ரிக் 440

Related Motor News

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறங்கிய ஹீரோ மேவ்ரிக் ஒப்பீடு

₹ 1.99 லட்சத்தில் ஹீரோ மேவ்ரிக் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் 5 முக்கிய சிறப்பு அம்சங்கள்

Tags: Hero Mavrick 440
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan