உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் முதன்முறையாக 100 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 10 கோடி உற்பத்தி எண்ணிக்கையை முன்னிட்டு 6 ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹீரோ நிறுவனம், 2013 ஆம் ஆண்டு 5 கோடி உற்பத்தி எண்ணிக்கையை கடந்த நிலையில் அடுத்த 7 ஆண்டுகளில் மற்றொரு 5 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. ஹீரோவின் ஹரித்வார் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறி 100 மில்லியன் பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விளங்குகின்றது.
புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில், இந்நிறுவனம் ஸ்ப்ளெண்டர் +, எக்ஸ்ட்ரீம் 160 ஆர், பேஷன் புரோ, கிளாமர் மற்றும் டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 உள்ளிட்ட ஆறு மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பிப்ரவரி 2021 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Road to 100 Million
அடுத்த 5 ஆண்டுகளில் வருடத்திற்கு 10 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரீமியம் பைக்குகள் உட்பட ஃபேஸ்லிஃப்ட், வேரியண்ட்கள் விற்பனைக்கு வெளியிட உள்ளது.