புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

 

ரூபாய் 67,300 ஆரம்ப விலையில் ஹீரோ நிறுவனத்தின் சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது.

ஹீரோவின் புதிய 10 சென்சார் கொண்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள 125சிசி என்ஜினை பெற்றுள்ள சூப்பர் ஸ்பிளெண்டர் இப்போது அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ளது.

புதிய டைமண்ட் ஃபிரேம் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் கூடுதல் நீளத்தைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக சிறப்பான ஸ்டெபிளிட்டி வழங்குவதுடன் புதிய சூப்பர் ஸ்பிளெண்டரில் அடுத்தப்படியாக இருக்கையின் நீளம் 45 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் ஆப்ஷனை பொறுத்தவரை முன்புற டயரில் மட்டும் டிஸ்க் பிரேக் அல்லது இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் ஐபிஎஸ் எனப்படுகின்ற இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கின்றது.

புதிய பைக்கில் இப்போது பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது நீலம், கருப்பு, கிரே மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களை கொண்டுள்ளது.

பிஎஸ்6 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் – ரூ.67,300 (டிரம்)

பிஎஸ்6 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் – ரூ.70,800 (டிஸ்க்)

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Exit mobile version