2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ அரங்கில் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹீரோ நிறுவன ஜூம் 160 (Hero Xoom 160) ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் மேவ்ரிக் 440 பைக் வெளியானதை தொடர்ந்து இந்த கண்காட்சியில் E85 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மற்றும் விடா உள்ளிட்ட சர்ஜ் எஸ்32 பல்வேறு மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரில் லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 14hp மற்றும் 13.7Nm டார்க் வழங்குகின்றது. ஹீரோ மோட்டோகார்ப் காப்புரிமை பெறப்பட்ட i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஒரு சைலண்ட் ஸ்டார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
141 கிலோ எடை கொண்ட ஜூம் 160 ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இருபக்கமும் 14-இன்ச் வீல் உடன் இருவிதமான பயன்பாடுக்கு ஏற்ற டயர் உள்ளது.
கீலெஸ் ரிமோட் மூலம் திறக்கும் வகையில் பூட், மற்றும் ஸ்டார்ட் வசதியுடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் புளூடூத் இணைப்பின் வாயிலாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றுடன் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் ஹீரோ கனெக்ட் வசதி பெற்றதாக அமைந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற யமஹா ஏரோக்ஸ் 155cc மாடலுக்கு போட்டியாக ஹீரோ ஜூம் 160 விற்பனைக்கு ரூ.1.40 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…