ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடுத்த அட்வென்ச்சர் ரக மாடலான எக்ஸ்பல்ஸ் 421 மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி துவங்க உள்ள 2025 EICMA அரங்கில் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்பாக எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 210 போன்றவை ஹீரோ நிறுவனத்துக்கு அட்வென்ச்சர் பிரிவில் நல்ல வரவேற்பினை பெற காரணமாக உள்ள நிலையில் ப்ரீமியம் சந்தைக்கு ஏற்ற புதிய எக்ஸ்பல்ஸ் மாடலில் 421சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஹீரோவின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் டக்கார் ரேலியில் சிறப்பான அனுபவத்தை கொண்டுள்ளதால் வரவுள்ள புதிய 421cc என்ஜின் பவர் 45 முதல் 48 ஹெச்பி வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டார்க் 45 Nm வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இருக்கலாம்.
டிராக்ஷன் கண்ட்ரோல், சுவிட்சபிள் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் பல்வேறு நவீன அம்சங்களை கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக வரக்கூடும். வரும் 2025 EICMA அரங்கில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு 2026 துவக்க மாதங்களில் ரூ.2.50 லட்சத்துக்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.