125சிசி சந்தையில் முதல் ஏபிஎஸ் பெற்ற மாடலாக வந்த எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் கூடுதலாக ஆரஞ்ச் நிறத்தை சேர்த்து 125 மில்லியன் பேட்ஜிங் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1,00,034 விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கின்றது.
மற்றபடி, அப்ரேக்ஸ் ஆரஞ்ச் நிறத்தை தவிர எந்த மாற்றமும் இல்லாமல் ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் சீட் என இரு ஆப்ஷனில் மட்டும் இந்த நிறத்தை பெற்றுள்ளது. இந்த எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில், 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கிடைக்கின்ற நிலையில் பின்புறத்தில் டிரம் ஆப்ஷனுடன் கூடுதலாக ஏபிஎஸ் அல்லாத மாடலும் கிடைக்கின்றது.
சஸ்பென்ஷன் அமைப்பில் தொடர்ந்து டெலிஸ்கோபிக் ஃபோரக்கினை பெற்று பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பருடன், எல்சிடி கிளஸ்ட்டருடன் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஏற்கனவே, நாட்டின் பெரும்பாலான டீலர்களிடம் கிடைக்க துவங்கியுள்ளது.