Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ Xtreme 160R 4V vs Xtreme 160R 2V எந்த பைக் வாங்கலாம் ?

by MR.Durai
19 February 2024, 3:22 pm
in Bike Comparison, Bike News
0
ShareTweetSendShare

hero-xtreme-160r-4v-vs-xtreme-160-2v

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் Xtreme 160R 4V Vs Xtreme 160R 2V என இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து என்ஜின், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை சேர்க்கப்பட்டுள்ளது.

160cc பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற மாடலாக விளங்குகின்ற எக்ஸ்ட்ரீம் 160R 2v மாடலை விட கூடுதலாக 4 வால்வு, ஸ்பிளிட் சீட், கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுடன் ஹீரோ கனெக்ட் 2.0 ஆகியவற்றை எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பெற்றுள்ளது. குறிப்பாக இந்த மாடல் ஸ்டைலிஷான நிறங்கள், மிக வேகமான மாடலாக விளங்கும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

xtreme 160r 4v vs xtreme 160 2v side view

Hero Xtreme 160R 4V vs Xtreme 160R 2V

160cc சந்தையில் உள்ள மிக கடுமையான போட்டியாளர்களான பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் உள்ளிட்ட மாடல்களை எக்ஸ்ட்ரீம் 160R சீரிஸ் எதிர்கொள்ளுகின்றது.

குறிப்பாக எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடல் மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது. இவற்றில் இரண்டு வேரியண்டுகள் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது. டாப் வேரியண்ட் மட்டுமே அப்சைடு டவுன் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

xtreme 160r 4v price

2023 hero xtreme 160r bike

முதலில் இரு எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடல்களுக்கு இடையிலான என்ஜின் தொடர்பான ஒப்பீடு பற்றறி அறிந்து கொள்ளலாம். இரண்டு மாடல்களில் மாறுபட்ட என்ஜின் கூடுதல் பவர் வெளிப்படுத்துகின்றது.

Specs Hero Xtreme 160R 4V Hero Xtreme 160R 2V
என்ஜின் 163.2 cc Fi, Air oil cooled, 4V 163.2 cc Fi, Air cooled, 2V
பவர் 16.9 bhp at at 8,500 rpm 15 bhp at 8500 rpm
டார்க் 14.6 NM at 6000 rpm 14 NM at 6500 rpm
கியர்பாக்ஸ் 5 ஸ்பீடு 5 ஸ்பீடு
மைலேஜ் 50 Kmpl 52 Kmpl
அதிகபட்ச வேகம் 120 Kmph 110 Kmph

நெடுந்தொலைவு பயணித்திற்கு ஏற்ற மாடலாக சக்திவாய்ந்த என்ஜினை கொண்டுள்ள ஏர்-ஆயில் கூல்டு 163.2cc எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் பவர் அதிகபட்சமாக 16.9hp வரை வெளிப்படுத்துகின்றது. 2வால்வு பெற்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் பவர் மற்றும் டார்க் என இரண்டிலும் குறைவாக உள்ளதை மேலே உள்ள அட்டவனை தெளிவுப்படுத்துகின்றது.

சராசரியாக ஓட்டுதலில் பொதுவாக பல்வேறு பயனர்களின் குறிப்பின்படி எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி மைலேஜ் 49-52kmpl வரை வெளிப்படுத்துகின்றது. எனவே இந்த மாடலை விட சற்று குறைந்த மைலேஜை புதிய ஹீரோ பைக் மாடல் வெளிப்படுத்தும்.

hero-xtreme-160r-4v-vs-xtreme-160-2v

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

மிகப்பெரிய மேம்பாடு யூஎஸ்டி சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடலில் இரண்டு விதமான சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

Specs Hero Xtreme 160R 4V Hero Xtreme 160R 2V
முன் சஸ்பென்ஷன் 37mm KYB USD ஃபோர்க்/

டெலிஸ்கோபிக்

டெலிஸ்கோபிக் போர்க்
பின் சஸ்பென்ஷன் 7 அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் 7 அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்
பிரேக்கிங் சிஸ்டம் சிங்கிள் சேனல் ABS சிங்கிள் சேனல் ABS
முன்பக்க பிரேக் 276 mm டிஸ்க் 276 mm டிஸ்க்
பின்பக்க பிரேக் 220 mm டிஸ்க் 220mm டிஸ்க்/130 mm டிரம்
வீல் F/R 100/80-17 & 130/80-17 100/80-17 & 130/80-17

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இரு பைக்குகளிலும் பொதுவாக உள்ள நிலையில் முன்புறத்தில் 276mm டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220mm டிஸ்க் ஆனது இரு மாடல்களிலும் உள்ளது. கூடுதலாக 2 வால்வு பெற்ற மாடலில் 130mm டிரம் பிரேக் உள்ளது.

ஹீரோவின் இரு 160cc பைக்குகளிலும் ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

xtreme-160-2v

பரிமாணங்கள் ஒப்பீடு

இரண்டு எக்ஸ்ட்ரீம் 160R பைக்குகளுமே ஒரே மாதிரியான நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. மற்றபடி கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆனது 2 மிமீ வரை வித்தியாசப்படுகின்றது. ஸ்போர்ட்டிவ் தன்மையை மேலும் அதிகரிக்க 5 மிமீ வரை 160ஆர் 4வி பைக் 795 மிமீ ஆக இருக்கை உயரம் உள்ளது. மற்ற விபரங்களை முழுமையாக அட்டவனையில் காணலாம்.

Specs Hero Xtreme 160R 4V Hero Xtreme 160R 2V
எடை 145 Kg/ 144 Kg 139.5 Kg
இருக்கை உயரம் 795mm 790mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm 167mm
நீளம் 2,029mm 2,029mm
அகலம் 793mm 793mm
உயரம் 1,052mm 1,052mm
வீல் பேஸ் 1,333mm 1,327mm
சேசிஸ் டியூபுலர் டைமண்ட் டியூப்லர் டைமண்ட்

ஹீரோ கனெக்ட் 2.0 பெற்றதாக வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் பல்வேறு டெலிமேட்டிக்ஸ் வசதிகள் முந்தைய மாடலை விட கூடுதலாக பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக, இக்னிஷன் அலர்ட், பேனிக் அலெர்ட், ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் 160ஆர் 2வி என இரு மாடல்களுக்கு நிறங்களில் வித்தியாசப்படுவதுடன் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டு புதிய பாடி கிராபிக்ஸ் 4V பேட்ஜ் போன்றவை எளிதாக அறிந்து கொள்ள முடிகின்றது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடலின் புரோ வேரியண்ட் ஸ்பீளிட் சீட், கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க் நன்றாக வித்தியாசப்படுகின்றது.

Related Motor News

OBD-2B பெற்ற 2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி விற்பனைக்கு வெளியானது

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V விற்பனைக்கு வெளியானது

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 பஜாஜ் பல்சர் NS160 vs போட்டியாளர்களின் என்ஜின், விலை, வசதிகள் ஒப்பீடு

நவம்பர் 2023ல் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 25.6 % உயர்வு

hero-xtreme-160r-4v

விலை பட்டியல்

எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எகஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்குகளின் டாப் வேரியண்ட்களுக்கு இடையிலான வித்தியாசம் சுமார் ரூ.8,000 வரை உள்ளது.

Model Ex-Showroom Chennai
Hero Xtreme 160R 4V Rs.1,27 – 1.37 lakhs
Hero Xtreme 160R 2V Rs.1.19- 1.30 lakhs

Hero Passion plus Vs Shine 100 On-road Price in Tamil Nadu

Model On-road Price Chennai
Hero Xtreme 160R 4V Rs.1,50 – 1.61 lakhs
Hero Xtreme 160R 2V Rs.1.41- 1.54 lakhs

xtreme 160r 4v

ஹீரோ Xtreme 160R 4V vs Xtreme 160R 2V பவர் ஒப்பீடு ?

ஏர்-ஆயில் கூல்டு 163.2cc எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் பவர் அதிகபட்சமாக 16.9hp வரை வெளிப்படுத்துகின்றது. 2வால்வு பெற்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் பவர் 15bhp ஆகும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R சீரிஸ் போட்டியாளர்கள் யார் ?

பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.

Tags: Hero Xtreme 160RHero Xtreme 160R 4V
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

vx2 go and vx2 plus baas

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan