ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் 5 முக்கிய அம்சங்கள்

b0a05 hero xtreme 200s

முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட ஸ்போர்ட்டிவ் ரக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் முக்கிய விபரங்கள் மற்றும் என்ஜின் உட்பட பல்வேறு நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடல் இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற பல்சர் ஆர்எஸ்200, யமஹா ஆர்15 S, யமஹா ஆர்15 V 3.0, மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பன்ற மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S சிறப்புகள்

முன்பாக விற்பனைக்கு வெளியான எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முழழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் கருப்பு நிற அலாய் வீல், ஒற்றை இருக்கை, டெயில் செக்‌ஷன் என பல்வேறு அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ள ஃபேரிங் பேனல்கள் மிக நேர்த்தியான ஸ்டைல் பெற்று எக்ஸ் வரிசை லோகோ பதிக்கப்பட்டு அதில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் சுற்றுபுறத்தில் பிளாக் செய்யப்பட்ட பகுதி கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும்  17.1 Nm முறுக்குவிசை திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிரிப்மீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், சர்வீஸ் இன்டரவெல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 வழி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17 அங்குல வீல் கொண்டு  276 மிமீ டிஸ்க் முன்புறத்தில்,  220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

குறைவான உயரம் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த பைக்கின் இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ மற்றும் வாகனத்தின் எடை 149 கிலோகிராம் ஆகும்.

சிவப்பு, கருப்பு மற்றும் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களை பெற்றுள்ள இந்த பைக்கின் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. வரும் மே மாதம் இறுதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக் விலை ரூ.98,500 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Exit mobile version