Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் முக்கிய சிறப்புகள்.!

by MR.Durai
30 January 2025, 7:28 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள இந்தியாவின் 250சிசி சந்தையில் மிக வேகமான எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் விலை ரூபாய் 1,79,900 முதல் துவங்குகின்றது. 0-60 கிமீ வேகத்தை வெறும் 3.25 வினாடிகளில் எட்டிவிடும் என்பதனால் போட்டியாளர்களை விட மிக வேகமான நேக்டூ ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் பைக் என ஹீரோ நிறுவனம் குறிப்பிடுகின்றது.

குறிப்பாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்250, கேடிஎம் 250 டியூக், சுசூகி ஜிக்ஸர் 250 உட்பட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்ற எக்ஸ்ட்ரீம் 250 ஆர் பைக்கிற்கான ஹீரோவின் பிரீமியா டீலர்கள் மூலம் முன்பதிவு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு டெலிவரி மார்ச் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Hero Xtreme 250R

ஏற்கனவே ஹீரோ விற்பனை செய்து வருகின்ற ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கிலிருந்து பெறப்பட்ட 210சிசி எஞ்சின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு ஸ்ட்ரோக் 7mm வரை அதிகரிக்கப்பட்டு 249.03cc  லிக்யூடு கூல்டு DOHC 4 வால்வுகள் பெற்ற எஞ்சின் தற்பொழுது 30 PS பவர் ஆனது 9250 rpm-ல் வெளிப்படுத்துவதுடன் 7250 rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. அசிஸ்ட் மற்றும் சிலிப் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

முதன்முறையாக வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ப ஒளிரும் வகையிலான எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய இரண்டு மோடுகளை (Road & Sports) பெற்று பின்புற வீல் லிஃப்ட் ஆஃப் பாதுகாப்புடன்  முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் கொண்டுள்ளது. இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் வழங்கப்பட்டு ட்யூப்லெஸ் டயருடன் முன்புறம் 110/70-17 M/C 54H மற்றும் பின்புறத்தில் 150/60-17 M/C 66W டயரினை பெற்றுள்ளது.

all new hero xtreme 250r

ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்ட எக்ஸ்ட்ரீம் 250R பைக் மாடலில் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் ஷூட்டிங் ஸ்டார் என மூன்று விதமான நிறங்களை பெற்று எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டு 35க்கு மேற்பட்ட பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த ஹீரோ கனெக்ட் வசதிகளை பெற இசிம் கார்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

167.7 கிலோ எடை கொண்டுள்ள பைக்கின் வீல்பேஸ் 1357 மிமீ பெற்று 167 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு இருக்கையின் உயரம் 807 மிமீ ஆக உள்ளது.

மிக வேகமான பைக் மாடலாக விளங்குகின்ற எக்ஸ்ட்ரீம் 250 ஆர் அடிப்படையிலான ஃபேரிங் ஸ்டைல் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரவுள்ளது.

hero xtreme 250r red
2025 hero xtreme 250r
2025 hero xtreme 250r sideview
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R
hero xtreme 250r colours
all new hero xtreme 250r
2025 hero xtreme 250r spec

Related Motor News

ஏப்ரல் 20 முதல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R முன்பதிவு துவங்குகின்றது

2026 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 2.60 லட்சத்தில் வெளியானது.!

2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

Tags: 250cc BikesHero Xtreme 250R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new harley davidson x440t

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

2026 hero xoom 110

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan