விரைவில்.., பிஎஸ்6 ஹோண்டா ஷைன் விற்பனைக்கு அறிமுகமாகிறது

honda cb shine

வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஹோண்டா இரு சக்கர வாகன நிறுவனம், புதிய மாடல் ஒன்றை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இந்த மாடல் ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடலாக இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக வெளியிடப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 மாடலை தொடர்ந்து அடுத்த பிஎஸ்6 பைக் மாடலாக ஷைன் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் இந்த பைக்கின் முக்கிய ஆவணம் கசிந்ததில் ஷைன் பைக்கின் பவர் விபரங்கள் வெளியானது.

சிபி ஷைன் எஸ்பி மாடலின் பவர் 0.03 ஹெச்பி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முந்தைய 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. பிஎஸ் 4 மாசு உமிழ்வு என்ஜின் அதிகபட்சமாக 10.57 ஹெச்பி வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.

சிபி ஷைன் பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1,285மிமீ ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக்கின் நீளம் 13 மிமீ அதிகரிக்கப்பட்டு, 2020 மிமீ ஆக உயர்ந்துள்ளது. அடுது பைக்கின் அகலம் 23 மிமீ உயர்த்தப்பட்டு, 785 மிமீ ஆகவும், அதேவேளை, பைக்கின் உயரம் 82 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.

இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் என மொத்தமாக மூன்று மாடல்களும் வரவுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில், ஹோண்டாவின் அடுத்த பிஎஸ் 6 மாடலாக ஹோண்டா ஷைன் விலை 10-15 % வரை உயரக்கூடும்.

Exit mobile version