Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 7,February 2018
Share
1 Min Read
SHARE

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா டூ-வீலர் இந்தியா நிறுவனம், ஆக்டிவா ஸ்கூட்டரின் 5-வது தலைமுறை மாடலை ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்

இந்திய இரண்டு சக்கர வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் மாடலாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 2018 மாடல் ஹோண்டா ஆக்டிவா 5G என்ற பெயரில் புதிதாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்துடன் புதிய டீலக்ஸ் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது தலைமுறை ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றிருப்பதுடன், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் இக்கோ மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களை பெற்றிருப்பதுடன் புதிதாக மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்கள் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் சிறிய பைகளை மாட்டிக் கொள்வதுடன், மஃப்லர் பாதுகாப்பு கவர் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ள நிலையில் 109சிசி ஹோண்டா இக்கோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜின் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9 Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் சிறிய அளவிலான விலை உயர்வினை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை தவிர ஹோண்டா ஆட்டோ எக்ஸ்போவில் 11 மாடல்களை மொத்தமாக காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை ஹோண்டா எக்ஸ் பிளேட் , கிரேஸியா, ஆப்ரிக்கா ட்வின், க்ளிக் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

More Auto News

2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது
யமஹா FZ-FI, FZS-FI பைக்குகள் திரும்ப அழைப்பு
ரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்
முதன்முறையாக பிஐஎஸ் தரச் சான்று பெற்ற ஏதெர் எனர்ஜி சார்ஜிங் கனெக்டர்
பஜாஜ் புரூஸர் 125 சிஎன்ஜி பைக்கின் சோதனை ஓட்ட விபரம்
சாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 டீசர் வெளியானது
2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பற்றி விற்பனைக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.!
மீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்
ரிவோல்ட் RV 400 எலக்ட்ரிக் பைக் உற்பத்தி துவங்கியது
TAGGED:Honda Activa 5G
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved