விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையில் பிரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 109.51 சிசி என்ஜின் கொண்டு ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.

தற்போதுள்ள ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய பிரீமியம் வேரியண்ட் வெளிப்புறத்தில் சில மாற்றங்களைப் பெறுகிறது.

புதுப்பிப்புகளில் புதிய க்ளோஸ் மெட்டாலிக் நேவி ப்ளூ நிறம், கோல்டன் நிற சக்கரங்கள், முன்பக்கத்தில் கோல்டன் அசென்ட்ஸ், பேனல்களில் 3டி கோல்ட் நிற எழுத்துக்கள் மற்றும் பொருந்தக்கூடிய ஃப்ளோர் போர்டு பேனலுடன் புதிய பிரவுன் இருக்கை ஆகியவை அடங்கும்.

தற்போதுள்ள ஆக்டிவா 6ஜியில் இருந்து மற்ற அனைத்து அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்கூட்டரை விட பிரீமியம் விலையில் எதிர்பார்க்கலாம்.

Share