Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பிப்ரவரி 8-ல் ஹோண்டா சிபி300ஆர் பைக் வெளியாகிறது

By MR.Durai
Last updated: 22,January 2019
Share
SHARE

55989 2019 honda cb300r red

வருகின்ற பிப்ரவரி 8, 2019-யில் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை ரூ.2.50 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. ஹோண்டா விங்க் டீலர்கள் வாயிலாக ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

ஹோண்டா சிபி300ஆர்

மிகவும் ஸ்டைலிஷனான அம்ங்களை பெற்ற ரெட்ரோ ஸ்போர்ட்டிவ் கஃபே ரேசர் மாடலாக வரவுள்ள சிபி300ஆர் பைக்கில் சக்திவாய்ந்த 31.4hp பவர் மற்றும்  27Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 286சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் இடம் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

143 கிலோ கிராம் எடையை பெற்றுள்ள சிபி300ஆர் பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது. 300 கிமீ வரை ஒருமுறை பெட்ரோல் கலனை நிரப்பினால் பயணிக்க இயலும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 30.2 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் மிகவும் ஸ்டைலிஷான வடிவமைப்பை வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டில் இரண்டு பார்களை நடுவில் இடம்பெற்றுள்ளது. முழுமையான  TFT டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டதாக விளங்குகின்றது.

18185 honda cb300r cluster

41 மிமீ யூஎஸ்டி ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. இந்த பைக்கில் 4 பிஸ்டன்களை கொண்ட 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. சிபி300ஆர் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது.

ரூ.2.50 லட்சம் விலைக்குள் ஹோண்டா CB300R பைக் விலை அமைந்திருக்கும். வருகின்ற பிப்ரவரி 8ந் தேதி விலை விபரம் வெளியாக உள்ளது. தற்போது சென்னையில் எஸ்விஎம் மோட்டார்ஸ் மற்றும் கோவையில் உள்ள சூர்யபாலா மோட்டார்ஸ் என இரு ஷோரூம்களில் மட்டும் முன்பதிவு நடைபெறுகின்றது.

b8639 honda cb300r 4c72b honda cb300r red

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:Honda 2wheelersHonda CB300R
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 சுசூகி ஜிக்ஸர் 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved