ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடலான ஹைனெஸ் CB350 பைக்கில் புதிய மேட் பேர்ல் கிரே வெள்ளை என்ற வெள்ளை நிறத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நிறம் இந்தியாவிற்க்கு வரக்கூடும்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 முதல் பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற சிபி 350 பைக்கிற்கு , ஜாவா, யெஸ்டி, ஹார்லி எக்ஸ்440 மற்றும் ட்ரையம்ப் ஸ்பீட் 400 உள்ளிட மாடல்கள் உள்ளன.
பல்வேறு கஸ்டமைஸ் ஸ்டைல் ஆப்ஷன்களை கொண்டுள்ள CB350 பைக்கில் 20.78 bhp பவர் மற்றும் 30 Nm டார்க் வழங்குகின்ற 348.36 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளை நிறம் அல்லாமல் பத்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நிறத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை. சிபி 350 மாடலின் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் அலாய் வீல் உள்ளது.
சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் அடுத்தப்படியாக பிரேக்கிங் அமைப்பில் பொதுவாக டிஸ்க் பிரேக் சேர்க்கப்பட்டு ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. மூலம் கவனிக்கப்படுகிறது.
கஸ்டம் கிட்ஸ் 4 விதமாக CB350 மாடலில் கஃபே ரேசர், கம்ஃபோர்ட், சோலோ கேரியர் மற்றும் டூரர் என நான்கு விதமான கஸ்டமைஸ் வசதி உள்ளது.
ஹோண்டா CB 350 RS பைக்கில் கூடுதலாக, Puco Blue என்ற நிறத்தை பெற்றுள்ளது. ஜப்பானிய சந்தையில் ஹோண்டா GB350 என விற்பனை செய்யப்படுகின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…