Categories: Bike News

Honda Hornet 2.0 : ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு அறிமுகம்

 

ஹோண்டா ஹார்னெட் 2.0

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹார்னெட் 2.0 மாடல் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் 184சிசி இன்ஜின் பெற்று ரூ.1.30 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற 180-200சிசி வரையிலான சந்தையில் உள்ள மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய ஹார்னெட் 2.0 மாடல் மிக நேர்த்தியாக ஏரோடைனமிக்ஸ் வடிவ தாத்பரியத்தைப் பின்பற்றி பல்வேறு நவீனத்துவதமான வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உட்பட டர்ன் இன்டிகேட்டர் என அனைத்தும் எல்இடி விளக்குகளாக கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறம் மிக நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் கொண்டு கோல்டு நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க், நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், பேட்டரி இருப்பினை அறியும் வசதி இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ் பிரேக் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற டயரில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையான 184cc PGM-FI HET இன்ஜின் அதிகபட்சமாக 17.03 hp பவர் மற்றும் 16.1 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் 0-200 மீட்டரை எட்டுவதற்கு 11.25 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 விலை ரூ.1,30,182 (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்) ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பல்சர் என்எஸ் 200 மாடல்களை எதிர்கொள்ள உள்ள புதிய ஹார்னெட் விற்பனைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் டீலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஹோண்டா லிவோ பிஎஸ்-6 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்