ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்கும் ஹோண்டா டூ வீலர்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், 2020 வருட முடிவினை முன்னிட்டு, எஸ்பி 125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, கிரேஸியா 125 மற்றும் சிடி 110 ட்ரீம் ஆகிய மாடல்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையாக ரூ.5,000 வழங்குகின்றது.

ஐ.சி.ஐ.சி.ஐ, ஃபெடரல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், பாங்க் ஆப் பரோடா மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்க வேண்டும். அவ்வாறு ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது சலுகையின் பலன்களைப் பெறலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஆக்டிவா 6ஜி மாடல் விளங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் புதிய 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Share