ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் நீக்கப்படவில்லை

இந்தியாவில் 2016 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹோண்டா நவி எனும் மினி பைக் மாடல் வரவேற்பு குறைந்து வரும் நிலையில், சந்தையிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவலை ஹோண்டா டூ வீலர் நிறுவனம் மறுத்துள்ளது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர்

2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது அபரிதமான வரவேற்பினை பெற்றிருந்த நவி ஸ்கூட்டர் நாளடைவில் வரவேற்பினை இழந்த நிலையில் , கடந்த சில மாதங்களாக விற்பனை எண்ணிக்கையை மிக குறைவாக பதிவு செய்து வந்த நிலையில் மாரச் 2018 யில் ஹோண்டா தொழிற்சாலையில் இந்த மாடல் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியது.

இதனை தொடர்ந்து பிரசத்தி பெற்ற மோட்டார் தளம் ஒன்றின் கேள்விக்கு பதில் அளித்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், நவி மாடல் சந்தையிலிருந்து நீக்கப்படவில்லை, தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதால், தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட நவி சந்தைக்கு வெளியாகலாம்.

இது விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான அற்றல் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறன் கொண்ட 109சிசி எஞ்சினை தொடர்ந்து பெற்றிருக்கும். 2018-2019 ஆம் நிதி வருடத்தில் மொத்தம் 19 இரு சக்கர வானங்களை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ள நிலையில் , இவற்றில் புதுப்பிக்கப்பட்ட 18 மாடல்கள் மற்றும் ஒரு புதிய மாடலும் வெளியிடப்பட உள்ளது.