இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நின்ஜா 650, Z650 மற்றும் வெர்சிஸ் 650 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள திறன் மிகுந்த 649 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. 650 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 61 பிஎஸ் ஆற்றல் , 63 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு விசேஷ அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்ரூஸர் ரக வல்கன் எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள எர்கோ ஃபீட் அம்சம் எவ்விதமான உயரத்தை கொண்டவர்களும் எளிதாக வாகனத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் இந்த பைக்கில் நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையிலான ஹேண்டில் பார், ஃபூட் பெக் ஆகியவற்றை மூன்று விதமாக மாற்றியமைக்கலாம்.
முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 250 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் கொண்டதாக வந்துள்ளது.
கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விலை ரூ. 5.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…