இந்தியாவின் மிகவும் போட்டியாளர்கள் நிறைந்த 160சிசி சந்தையில் நுழைந்துள்ள கேடிஎம் 160 டியூக் மாடலின் விலை ரூ.1,85,126 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக பிரசத்தி பெற்ற யமஹா MT-15 V2 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
புதிதாக வந்துள்ள 160 டியூக்கில் ஸ்பிளிட் டெர்லிஸ் ஃபிரேமினை பெற்று 164.2cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 19PS at 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm at 7500 rpm ஆக உள்ளது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
மற்றபடி, பெரும்பாலான பாகங்களை 200 டியூக்கில் இருந்து பகிர்ந்து கொண்டு 43மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய WP மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.
பிரேக்கிங் 320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ பின்புற டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS கொண்டுள்ளது. சூப்பர் மோட்டோ, ஆஃப் ரோடு ஏபிஎஸ் வசதியும் உள்ளது.
எலக்ட்ரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் நீலம் மற்றும் சில்வர் மெட்டாலிக் மேட் என மூன்று நிறங்களை பெற்று எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு அடிப்படையான அம்சங்களுடன் எரிபொருள் சிக்கனம், நேவிகேஷன் ஆகியவற்றை பெற கேடிஎம் கனெக்ட் ஆப் இணைப்பினை பெற்றுள்ளது.