ரூ.2.47 லட்சத்தில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் V அறிமுகமானது

குறைந்த இருக்கை உயரம் பெற்றதாக வந்துள்ள 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் V பைக்கின் விலை ₹ 2.47 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இருக்கை உயரம் மாற்றம் இல்லாத மாடலும் இதே விலையில் கிடைக்கின்றது.

STD 250 அட்வென்ச்சர் மாடலின் இருக்கை உயரம் 855mm உடன் ஒப்பிடும்போது V வேரியண்ட் 834mm ஆக குறைந்த இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கேடிஎம் தனது அட்வென்ச்சர் மாடல்களில் பொருந்தக்கூடிய சஸ்பென்ஷன் மூலம் குறைந்த இருக்கை உயரத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

2023 KTM 250 Adventure V

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் 248.76cc சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 9,000rpm-ல் 29.6bhp பவர், 7,500rpm-ல் 24Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் ஹாலோஜன் ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகளுடன், எல்இடி டெயில்லைட் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர் பெற்றுள்ளது.  முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பல்வேறு அம்சங்கள் கிடைக்கின்றது.

முன்பக்கத்தில் ரேடியல் காலிபருடன் 320mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஃபுளோட்டிங் காலிபருடன் 230mm டிஸ்க் பெற்று இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சத்தை ஆஃப்-ரோடிங்கின் போது பின்புறத்தில் ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது.

43மிமீ யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோ-ஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. போல்ட் செய்யப்பட்ட துணை சட்டத்துடன் கூடிய ட்யூப்லெர் ஸ்பிளிட்-ட்ரெல்லிஸ் பிரேம்,பெற்று 177kg (கெர்ப்) எடையை பெற்றுள்ளது.

Share