மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக் அறிந்து கொள்ள வேண்டியவை

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் முதல் கியர்பாக்ஸ் பெற்ற (Matter Aera) மேட்டர் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ என இரண்டு பேட்டரி மின்சார பைக் மாடல்களின் செயல்திறன், ரேஞ்சு, ஆன்-ரோடு விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் 20க்கு மேற்பட்ட பைக் வகையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றில் பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் பைக்குகள், மற்றும் பட்ஜெட் விலை பைக்குகளும் உள்ளன.

Matter Aera Electric Bike

ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ பைக்குகளில் பொதுவாக  5kWh பேட்டரி பொருத்தப்பட்டு லிக்யூடு கூல்டு மோட்டார் அதிகபட்சமாக 10KW பவர் வெளிப்படுத்தும். மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 விநாடிகளுக்கு குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 3+1 ரைடிங் மோடு கொண்டுள்ளது.  ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும்

சாதாரண வீட்டிலுள்ள சார்ஜர் கொண்டு சார்ஜிங் பயன்படுத்தும் போது 5 மணி நேரம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 2 மணி நேரம் ஆகும்.

Aera 5000  பைக்கில் புளூடூத் இணைப்பு, பார்க் அசிஸ்ட், கீலெஸ் ஆபரேஷன், OTA மேம்படுத்தல்கள், ப்ளிங்கர்கள் மற்றும் வரவேற்பு விளக்குகளுடன் 7-இன்ச் டச் ஸ்கீரின் வழங்கப்பட்டுள்ளது.

5000+ ஆனது புளூடூத் இணைப்புடன், லைஃப்ஸ்டைல் மற்றும் பராமரிப்பு பேக்கேஜுடன் பல்வேறு அட்வான்ஸ்டு மேம்பாடுகளை கொண்டுள்ளது.

பேட்டரியின் எடை தோராயமாக 40 கிலோ மற்றும் ஏரா இ-பைக் 180 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

மேட்டர் நிறுவனம் ஏரா எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருடம் அல்லது வரம்பற்ற கீமீ வாரண்டி வழங்குகின்றது.

மேட்டர் எனெர்ஜி நிறுவனத்தின் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ பைக்குகளை தவிர Aera 4000 மற்றும் Aera 6000 மாடலும் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை என மூன்று மாவட்டங்களில் கிடைக்க உள்ளது.

இந்தியாவில் உள்ள 25 முன்னணி மாநகரங்களில் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ கிடைக்க உள்ளது. முன்பதிவு matter.in, மற்றும் ஃபிளிப்கார்ட் வாயிலாக மேற்கொள்ளலாம்.

மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம்

மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம்

(ex-showroom India)

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ஆன்-ரோடு விலை ?

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,55,500 முதல் ₹ 1,65,600

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக் ரேஞ்சு எவ்வளவு ?

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.

Share
Tags: Matter Aera