Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

By MR.Durai
Last updated: 12,October 2024
Share
SHARE

2025 yamaha r3

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் கூடுதலான சில பகுதிகளை பெற்று வந்துள்ள புதிய 2025 யமஹா R3 பைக் ஆனது விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட உள்ளதால் இந்திய சந்தையிலும் இந்த மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

பெரும்பாலும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் என்ஜின் சார்ந்தவற்றில் யமஹா ஆர்3 சிறிய அளவிலான மாறுதல்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் புதிய R9 பைக்கின் தோற்றத்தை தழுவிய சிறிய மாற்றங்கள் பெற்றும் சிறிய அளவிலான பின்புற வால் பகுதியானது புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதே நேரத்தில் கூடுதலாக ஸ்லீப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டிருப்பதுடன் முன்புற பேனல்கள், எல்இடி ரன்னிங் விளக்குடன், புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் மற்றும் ஏர் இன்டெக் பகுதிகள் சிறிய அளவிலான மாறுதல்களை சந்தித்துள்ளன.

R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக்‌ ஷிஃப்டர் உள்ளது.

298 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. முன்புறத்தில் KYB 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும்  அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் உள்ளது.

2025 yamaha r3 blue

தற்பொழுது ஆர் 3 மாடலில் டீம் யமஹா ப்ளூ மற்றும் மேட் ஸ்டீல்த் பிளாக், புதிய லூனார் வெள்ளை உடன் நெபுலா ப்ளூ என மூன்று நிறங்களுடன்,புதிய முழுமையான எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கின்றது.

தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற யமஹா R3 மாடல் ஆன்ரோடு விலை ₹5.55 லட்சத்தில் கிடைத்து வருகின்ற நிலையில் புதிய மாடல் அனேகமாக 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. சற்று கூடுதலான விலையில் எதிர்பார்க்கலாம் ஏனென்றால் முழுமையான வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்தே தற்பொழுது இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

2025 yamaha r3 black

2025 yamaha r3 lcd cluster

 

 

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:YamahaYamaha R3
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved