பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் 999cc என்ஜின் பெற்ற S 1000 R மணிக்கு 250கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் இந்திய சந்தையில் அறிமுக சலுகையாக ரூ.19.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை பல்வேறு வகையில் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த மேம்பாடுகள் மற்றும் டிசைன் மேம்பாடுகளை பெற்றுள்ளது.
999cc, லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று நான்கு சிலிண்டர் எஞ்சின், 11,000rpm-ல் 170bhp மற்றும் 9,250rpm-ல் 114Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், வெறும் 3.2 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்ட முடியும் என்றும், அதிகபட்ச வேகம் 250kmph ஆக மின்னணு முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
BMW S 1000 R மூன்று கவர்ச்சிகரமான நிறங்களாக Blackstorm Metallic, Bluefire/Mugiallo Yellow (Style Sport) மற்றும் Lightwhite Uni/M Motorsport (M வெர்ஷன்) என கிடைக்கின்றது.
டைனமிக், கம்ஃபோர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளுடன் இதில் க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட் கிரிப்ஸ், ஷிப்ட் அசிஸ்டென்ட், எம் லைட்வெயிட் பேட்டரி மற்றும் ஃபோர்ஜ்டு வீல்கள் போன்றவை உள்ளது.
6.5 TFT டிஸ்ப்ளே உடன் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகள், USB சார்ஜிங், முழு LED லைட், ABS ப்ரோ மற்றும் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் (DTC) ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு-அச்சு சென்சார் உள்ளது.
டைனமிக் பேக்கேஜில் டைனமிக் டேம்பிங் கண்ட்ரோல், ப்ரோ ரைடிங் மோடுகள், ஷிப்ட் அசிஸ்டென்ட் ப்ரோ, என்ஜின் ஸ்பாய்லர் ஆகியவை அடங்கும்.
கம்ஃபோர்ட் பேக்கேஜில் கீலெஸ் ரைடு, க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட் கிரிப்ஸ் மற்றும் டயர் பிரஷர் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
எம் ஸ்போர்ட் பேக்கேஜில் கலர் எம் பேக்கேஜ், எம் ஸ்போர்ட் சீட், எம் ஃப்யூவல் ஃபில்லர் கேப், எம் லைட்வெயிட் பேட்டரி, ஸ்போர்ட்ஸ் சைலன்சர், எம் எண்டூரன்ஸ் செயின், எம் ஜிபிஎஸ்-லேப்ட்ரிகர் மற்றும் எம் ஃபோர்ஜ்டு வீல் உள்ளன.