இந்தியாவில் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தருகின்ற மாடல்களில் ஒன்றான ஹீரோ HF டீலக்ஸ் அடிப்படையில் புரோ வேரியண்டில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் விலை ரூ.73,550 ஆக எக்ஸ்-ஷோரூம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மாடலில் இருந்து மாறுபட்ட வசதிகளில் குறிப்பாக எல்இடி ஹெட்லேம்ப் உடன் மேற்பகுதியில் எல்இடி பொசிஷன் விளக்கு, அடுத்தப்படியாக கொடுக்கப்பட்டுள்ள எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் நிகழ்நேரத்தில் எரிபொருள் இருப்பு, சராசரி மைலேஜ் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
HF டீலக்ஸ் ப்ரோவின் மற்ற அம்சங்களில் டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய பெரிய 18 அங்குலம் கொண்ட முன் மற்றும் பின்புற சக்கரங்களைக் கொண்டுள்ளது. 130மிமீ முன் மற்றும் பின்புற பிரேக் டிரம் பிரேக்கிங் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிறந்த கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக், வலுவான 2-படி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் அமைப்புடன் நீடித்து உழைக்கும் தன்மைக்காக வடிவமைக்கப்பட்டது.
தொடர்ந்து OBD-2Bஆதரவினை பெற்ற i3S (Idle Stop-Start System) உடன் 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc எஞ்சின் பெற்று 4 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி அசுதோஷ் வர்மா கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு HF டீலக்ஸ் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது, அதன் நம்பகத்தன்மை மற்றும் எரிபொருள் செயல்திறனுக்காக கொண்டாடப்படுகிறது.
புதிய HF டீலக்ஸ் ப்ரோ மூலம், புதிய தலைமுறை இந்திய ரைடர்களின் தேவைகளுக்கு ஏற்ப, துணிச்சலான வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மைலேஜூடன் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த நம்பிக்கையை நாங்கள் முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.